Connect with us

Helth

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்…

Published

on

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட் (AstraZeneca COVISHELD) ஆகிய தடுப்பூசிகளை மனிதனுக்கு செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்திய அரசாங்கம் வழங்கிய கொவிட் தடுப்புசிகளின் முதல் தொகுதி இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் நேற்று (28) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்த வேண்டுகோளின் பேரில் இந்த தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றல் மேல் மாகாணத்தின் 06 முக்கிய வைத்தியசாலைகளில் இன்றுடி முதல் (29) ஆரம்பிக்கப்படும்.

கொவிட் தடுப்பு நடவடிக்கையில் முன்னின்று செயற்படும் சுமார் 150,000 சுகாதாரப் பணியாளர்கள், 120,000 முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

குளிரூட்டப்பட்ட வாகனங்களின் மூலம் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சீன அரசாங்கமும் 300,000 தடுப்பூசிகளை வழங்கவுள்ளது என கொவிட் தடுப்பூசி கொள்முதல் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றிக்கொள்வது தனிநபர்களின் சுயாதீனமான முடிவாகும் எனவும், அதை விரும்பாதவர்கள் ஏற்றிக்கொள்ளாதிருக்க முடியும் என்றும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.