Connect with us

Helth

விடை இல்லாத வினா?

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 49 இலட்சத்தை கடந்துள்ளது.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 இலட்சத்து 36 ஆயிரத்து 717 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவற்றில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 99 ஆயிரத்து 594 பேருக்கும், பிரேசிலில் 62 ஆயிரத்து 452 பேருக்கும், இங்கிலாந்தில் 41 ஆயிரத்து 346 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 158 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 9 கோடியே 49 இலட்சத்து 21 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 கோடியே 51இலட்சத்து 34 ஆயிரத்து 404 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1 இலட்சத்து 11 ஆயிரத்து 601 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பாதிப்பில் இருந்து 6 கோடியே 77 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது .

ஆனாலும், கொரோனாவால் இதுவரை 20 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்

அமெரிக்கா – 2,43,02,870

இந்தியா – 1,05,58,710

பிரேசில் – 84,56,705

ரஸ்யா – 35,44,623

இங்கிலாந்து – 33,57,361