Helth
பசறையில் மேலும் இரு தொற்றாளர்கள்

பசறை – டெமேரியா மற்றும் கோணக்கலை காவத்தைப் பகுதிகளில் இன்றையதினம் (26) இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள், மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த 34 நபர்களின் பி.சி.ஆர் முடிவுகள் இன்று வெளியாகின.
இதில் பொல்ஹாலந்த மற்றும் டெமேரியா பகுதிகளில் உள்ள இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை பிரதேச பொதுசுகாதார பிரிவு முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.