Helth
உடனடியாக அமுல்ப்படுத்தப்பட்ட தீர்மானம்

அவிசாவெல, கொஸ்கம மற்றும் ருவனவெல்ல ஆகிய பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.
நேற்று (23) அவிசாவெல பிரதேசத்தில் 99 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் மார்க்கங்களின் பிரதான இடங்களில் எழுமாறாக ரெப்பிட் என்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
கடந்த நாட்களில் 70 ற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றுபரவல் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால், பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதேவேளை, வெளிமாவட்டங்களில் இருந்து திருகோணமலைக்கு உள்வருவதை தவிர்த்து செயற்படுமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.