உள்நாட்டு செய்தி
“அஞ்சாதீர்கள்” – இராணுவ தளபதி

புனித வாரத்தின் இறுதி நாட்களில் அனைத்து தேவாலயங்களுக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே அச்சமின்றி சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து வழிப்பாடுகளில் ஈடுப்படுமாறும் அவர் அனைத்து கிறிஸ்தவர்களையும் கேட்டுள்ளார்.
இன்று (02) காலை ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே இராணுவத் தளபதி இதனை கூறினார்.