Helth
போக்குவரத்து நடவடிக்கைகளை கண்காணிக்க 9000 பொலிஸார்
ஒன்பதாயிரத்திற்கும் அதிகமான போக்குவரத்து பொலிஸாரை ஈடுப்படுத்தி நாடு முழுவதும் போக்குவரத்து நடைமுறைகளை கண்காணிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை கூறியுள்ளார்.
வாகன விபத்துக்களை குறைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எவரெனும் மதுபோதையில் வாகனம் செலுத்தி கைது செய்யப்;பட்டால் நீதிமன்றத்தின் ஊடாகவே அவருக்கு பிணை வழங்;கப்படும் எனவும் அவர் கூறினார்.