Connect with us

உள்நாட்டு செய்தி

“அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபடும் உரிமைக்கு பொலிஸார் எவ்வித தடையும் விதிக்க மாட்டார்கள்”

Published

on

அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபடும் உரிமைக்கு பொலிஸார் எவ்வித தடையும் விதிக்க மாட்டார்கள் என பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்ன தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபர் இது தொடர்பாக இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தார்.

அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பேச்சு , கருத்து சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்குள்ள உரிமைக்கு இலங்கை பொலிஸார் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மதிப்பளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.