19 வயதுக்குட்பட்பட்ட அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில் போட்டி மேற்கிந்திய தீவுகளின் நியூ சவுண்ட் யோடி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட்டின் நிர்வாக பணிப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் வீரர் ஏஸ்லே ஜைல்ஸ் விலகியுள்ளார். இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சில்வர் வூட் விலகியுள்ளார். அவரை பயிற்சியாளர் பதவியில் ஏஸ்லே...
19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கிண்ண 5 ஆவது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தானிடம், இலங்கை 238 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி உலகக் கிண்ண இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. அதன்படி இறுதிப் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் எதிர்வரும் 5 ஆம் திகதி மோதவுள்ளன. நேற்றைய இரண்டாவது அரைஇறுதி போட்டியில் அவுஸ்திரேலிய...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இன்று காலை நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளது. குறித்த போட்டி தொடர் எதிர்வரும் 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடருக்காக...
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக சுரங்க லக்மால் அறிவித்துள்ளார். எதிர்வரும் இந்திய தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக அவர் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டிடம் அறிpத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்டேர் உலக கிண்ண போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், இங்கிலாந்து அணியும் நேற்று மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து...
IPL ஏலத்தில் 590 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அதில் 23 பேர் இலங்கையணி வீரர்களாவர். அதில் அதிகூடிய முன் ஏலத் தொகையான 100 இலட்சம் ரூபா இலங்கையணியின் சகலத்துறை வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது....
அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள இலங்கையணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் இலங்கையணியின் உதவியாளர் டில்ஹான் பொன்சேக்காவுக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது உயிர் பாதுகாப்பு குமிழியில் உள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு...
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் டென்னிஸ் வரலாற்றில் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல்...