உள்நாட்டு செய்தி
ஏப்ரல் மாதம் அளவில் நாடு பாதாளத்திற்குள் விழும்: நளீன் பண்டார

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமானால் அதற்கு தற்போதைய அரசாங்கம் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
நுவரெலியா – வலப்பனையில் நேற்று (12) விவசாயிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.