உள்நாட்டு செய்தி
சஜித் பிரேமதாஸ
பல மாதங்களாக இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்புகளால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தடுக்கவும், சீர்குலைக்கவும் பெரும் சதியில் ஈடுபட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஹபுஹின்ன ஊடாக அமைச்சரவை மேற்கொண்டதாக பொய்யான தீர்மானங்கள்,மோசடித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை ஏற்காதிருக்கும் துரோக நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், மற்றுமொரு சந்தர்ப்பத்தில் திறைசேரியின் செயலாளர் மூலம் தேர்தலுக்கான பணத்தை வழங்க முடியாது என்றும், அரசாங்கத்திடம் பணமில்லை என்றும், சமூக நலப்பணிகள் உட்பட சம்பளம் வழங்குவதற்குக் கூட முடியாது என தெரிவிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இந்த தேர்தலை சீர்குலைக்கும் புதிய நடவடிக்கையாக நாளை அரசியலமைப்பு பேரவையின் ஊடாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றியமைத்து தேர்தல் ஆணைக்குழுவை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மக்களின் இறையாண்மையில் கை வைத்தால் அதற்கு வழங்கும் தண்டனை நாட்டின் சட்டப்புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஹபுஹின்ன சூட்சமம் மற்றும் திறைசேரி செயலாளர் ஊடாக மக்கள் இறையாண்மையை நாசம் செய்யும் முயற்சிகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்லும் என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (24) தெரிவித்தார்.