உள்நாட்டு செய்தி
இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தெரிவு
இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தெரிவுச் செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது.
இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர்.
இந்த நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தெரிவுச் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகி மெக்சிகோவை சேர்ந்த எண்ட்ரியா மெசா வாகையை சூட்டினார்.
ஹர்னாஸ் கவுர் கடந்த 2017 ஆம் ஆண்டு மிஸ் சண்டிகராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார்.
இந்தியா சார்பில் லாரா தத்தா 2000 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார்.
அதன்பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாக தெரிவுச் செய்யப்பட்டுள்ளமை தெரிவுச் செய்யப்பட்மை குறிப்பிடத்தக்கது.