Connect with us

உலகம்

மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் மூலம் மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படுகின்றது: பாப்பரசர்

Published

on

மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் மூலம் மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படுவதாக பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இத்தாலி சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வத்திகானில் பாப்பரசர் பிரான்சிசை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போதே பாப்பரசர் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் உலக மக்கள் பல நெருக்கடிகளை சந்தித்து உள்ளனர். இந்த நிச்சயமற்ற நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது, எதிர்காலத்துக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

“பலரும் தங்கள் வேலைகளை இழந்து விரக்தியின் உச்சியில் உள்ளனர். இது போன்ற தருணங்களில் கிறிஸ்தவர்களும், இந்து மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்ற முடியும். மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் மூலம் மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவதால், சமூகத்தில் மத மரபுகளின் பயன் மற்றும் வளத்தை உறுதியாக்குகின்றது “என்றார்.