Connect with us

உலகம்

“பதவி விலகலை அறிவிக்கும் எண்ணம் எனது மனதில் இல்லை”

Published

on

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் பதவி விலகும் முடிவை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

மூட்டு தசைநார் வீக்கமடைந்த நிலையில் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் 85 வயதாகும் பரிசுத்த பாப்பரசர் பதவி விலகும் முடிவை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

வயது மூப்பு மற்றும் உடல்நிலை பிரச்சினைகள் காரணமாக எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில் பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் பதவி விலகும் முடிவை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “கோடை இறுதியில் பதவி விலகலை அறிவிக்கும் எண்ணம் எனது மனதில் இல்லை” என்றார்.