Connect with us

உள்நாட்டு செய்தி

வெளிநாட்டு அமைச்சரைச் சந்தித்த அப்போஸ்தலிக் நன்சியோ ஈஸ்டர் குண்டுவெடிப்பு விசாரணை குறித்து கலந்துரையாடல்

Published

on

அப்போஸ்தலிக் நன்சியோ (வத்திக்கான் தூதுவர்) மாண்புமிகு பேராயர் பிரையன் உடைக்வே இலங்கைக்கான வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை ஆகஸ்ட் 31ஆந் திகதி, செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய அதிமேதகு ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆயுதப்படைகளால் நிர்மானிக்கப்பட்ட நீர்கொழும்பு, பொலவலானாவில் அமைந்துள்ள பெனடிக்ட் XVI கத்தோலிக்க நிறுவனத்திற்கு பட்டம் வழங்கும் அந்தஸ்தை வழங்கியமை கல்வி அமைச்சராக தான் பணியாற்றிய போது தனது முதன்மையான கடமைகளில் ஒன்றாகும் என இந்த சந்திப்பின் போது வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். கல்வியை வழங்குவது மட்டுமல்லாமல், சமூகத்தின் குறைந்த சலுகைப் பிரிவுகளுக்கு சமூக சமத்துவத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நிறுவனத்தை அமைப்பதன் முக்கியத்துவத்தை அமைச்சர் எடுத்துரைத்தார்.

பேரிடர் மற்றும் கொடூரமான சோகம் மற்றும் கத்தோலிக்க திருச்சபை அனுபவித்த வலி மற்றும் துன்பம் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் பொறுப்புள்ள அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டுவருவதற்காக நீதியின் தேவைப்பாட்டையும் அமைச்சர் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற விசாரணையின் தன்மையை மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க பிஷப் மாநாடு ஆகியவற்றுக்கு ஆரம்பத்திலேயே குறிப்பிடுவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு வசதியாக தகவல்களை வெளிப்படுத்தும் கலந்துரையாடலொன்றின் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

கத்தோலிக்க திருச்சபையின் நேர்மையான உந்துதலையும் வேதனையையும் அதன் தூய்மையான நோக்கங்களையும் அரசாங்கம் சரியாக புரிந்துகொள்வதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

செப்டம்பர் 12ஆந் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை மற்றும் 2021 செப்டம்பர் 21ஆந் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஆகியவற்றின் அமர்வுகளை முன்னிலைப்படுத்தி, கத்தோலிக்க திருச்சபையின் உண்மையான நோக்கங்களுக்கு முரணான நிலைப்பாட்டை தமது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயற்சிக்கும் சில குழுக்கள் குறித்து அமைச்சர் கவனத்தை ஈர்த்தார். கத்தோலிக்க திருச்சபையின் தூய்மையான நோக்கங்கள் உள்நாட்டிலோ அல்லது சர்வதேசத்திலோ புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்படல் வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறுபான்மையினராக இருந்த போதிலும், இலங்கையில் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் கத்தோலிக்கர்கள் உரிய மதிப்புடன் நடாத்தப்படுகின்றமைக்கு உள்ளார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்த பாப்பல் நன்சியோ, வேறு சில நாடுகளில் இவ்வாறான அஙகீகாரத்தை தான் அவதானிக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

தேவாலயத்தின் பிரதிநிதிகளுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கலந்துரையாட முடியும் ஆதலால், பிஷப் மாநாட்டின் ஒரு குழுவுடன் சந்திப்பொன்றை ஆரம்பத் திகதியில் ஏற்பாடு செய்வதனை அப்போஸ்தலிக் நன்சியோ பரிந்துரைத்தார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பாராட்டிய அமைச்சர், தேவாலயத்துடனான கலந்துரையாடலில் முழுமையான தகவல்களை வழங்குவதற்காக அரசாங்கம் அனைத்து விவரங்களையும் சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ்மா அதிபர் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய அரச நிறுவனங்களிடமிருந்து சேகரித்து வருவதாகத் தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைச்சரின் புதிய பணி வெற்றி பெறுவதற்காக அப்போஸ்தலிக் நன்சியோ வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

(வெளிநாட்டு அமைச்சு)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *