Connect with us

உள்நாட்டு செய்தி

இந்திய வெளிவிவகார செயலாளர் யாழில் பல்வேறு சந்திப்பு, இன்று கூட்டமைப்பை சந்திக்கின்றார்.

Published

on

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா பல்வேறுபட்ட தரப்பினர்களுடனும் சந்திப்புகளில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று (03) இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

இச் சந்திப்பில், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன், யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் உட்பட அரசியல் பிரமுகர்களும், கல்வித்துறை சார்ந்தவர்கள், வர்த்தக துறை பிரதிநிதிகள், அரசியல் ஆய்வாளர்கள் ஆகிய சிலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட அக்கரபத்தனை டொரின்டன் எம்.எச்.பிரிவில் நிர்மானிக்கப்பட்ட 48 வீடுகள் இன்று (04) பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.

இந்திய வெளிவிவகார செயலாளர் மற்றும் தோட்ட வீடமைப்பு சமூதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் இந்த வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.

இந்த வீடுகளை நிர்மானிப்பதற்காக இந்திய அரசாங்கம் தலா ஒவ்வொரு வீட்டுக்கும் 10 லட்சம் செலவு செய்துள்ளது.

இதேவேளை இந்திய வெளிவிவகார செயலாளர் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.