Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை வந்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்

Published

on

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இரவு 7.40 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவருடன் 3 உறுப்பினர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நாட்டில் தங்கி இருப்பார் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதன்போது சில இருதரப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் அவர் ஆரம்பித்துவைப்பார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்திய வெளிவிவகார செயலாளர் திருகோணமலை, யாழ்ப்பாணம், மலையகம் உள்ளிட்ட தமிழ் பிரதேசங்களுக்கும் பயணிக்கவுள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்பபம் இதுவாகும்.