Connect with us

Sports

ஒலிம்பிக்கில் சீனா முதல் தங்கப்பதக்கம்

Published

on

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பெண்கள் 10மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது.

இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் இரண்டு தென்கொரிய வீராங்கனைகள் மற்றும் நோர்வே, சீனா, அமெரிக்க வீராங்கனைகள் உட்பட 8 பேர் தகுதி பெற்றனர்.

இறுதி போட்டியில் சீனாவைச் சேர்ந்த யாங் கிங் 251.8 புள்ளிகள் பெற்று ஒலிம்பிக் சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார்.

இதன்மூலம் சீனா டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.

இரண்டாவதாக, ரஷ்யாவைச் சேர்ந்த கைலாஷினா அனஸ்டாசிட்ட 251.1 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார்.

அடுத்து , சுவிட்சர்லாந்தை சேர்ந்த சரிஸ்டென் நினா 230.6 புள்ளிகளுடன் வெண்கல பதக்கம் வென்றார்.

இப்போட்டியில் 50 பேர் கலந்து கொண்டதுடன் இலங்கை சார்ப்பில் போட்டியிட்ட டொஹானி எகொடவெல 49 ஆவது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.