Sports
16 ஆவது பாராலிம்பிக் போட்டி நிறைவு

16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நேற்று (05) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிறைவடைந்துள்ளன.
கடந்த மாதம் 24 திகதி முதல் இந்த போட்டிகள் இடம்பெற்றன.
இதில் அகதிகள் அணி உள்ளிட்ட 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீர, வீராங்கனைகள் பங்கேற்று 22 வகையான விளையாட்டுகளில் பங்குபற்றினர்.
பாராலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் பதக்கப்பட்டியலில் பதக்கப்பட்டியலில் மொத்தம் 86 நாடுகள் இடம் பிடித்தன.
இதில் சீனா 96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 207 பதக்கங்களடன் முதலிடத்தை பிடித்தது.
இங்கிலாந்து 124 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை பெற்றது.
போட்டியை நடத்திய ஜப்பான் 13 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் அடங்கலாக 51 பதக்கங்களுடன் 11 ஆவது இடத்தை பிடித்துக்கொண்டது.
பாராலிம்பிக் விளையாட்டுக்குரிய கொடி, 2024 ஆம் ஆண்டு பாராலிம்பிக் நடக்க உள்ள பெரிசிடம் ஒப்படைக்கப்பட்டது.