Connect with us

உள்நாட்டு செய்தி

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது

Published

on

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

மா உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனமொன்று, ஒரு கிலோகிராம் கோதுமை மாவுக்கான விலையை 18 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதையடுத்து, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது

இந்த நிலையில், குறித்த மா உற்பத்தி நிறுவனத்துடன், நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது.

அத்துடன், குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, மாவுக்கான விலையை அதிகரிக்கப் போவதில்லை என குறித்த தனியார் மா உற்பத்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார்.