உள்நாட்டு செய்தி
இலங்கை கிரிக்கெட் அணியின் தரவு பகுப்பாய்வாளருக்கு கொவிட்

இலங்கை கிரிக்கெட் அணியின் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி.நிரோஷனுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேன்ட் பிளவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் கடந்த தினம் நிறைவு பெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து தொடரில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.