உள்நாட்டு செய்தி
பேக்கரி பொருட்களின் விலைகள் உயரும் அபாயம்?

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (28) அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (27) முதல் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பேக்கரி பொருட்களின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.