உள்நாட்டு செய்தி
இலங்கைக்கு இந்தியா வழங்கிய உறுதி மொழி

தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையும் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு இந்தியாவின் நிலையான ஆதரவை வழங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உறுப்பினர்கள் இன்று (17) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை இந்திய இல்லத்தில் சந்தித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐந்து பேரடங்கிய குழுவினர் இந்த சநந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
மேலும் 13ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவை உயர்ஸ்தானிகர் இச்சந்திப்பில் எடுத்துரைத்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.