Connect with us

உள்நாட்டு செய்தி

சிஸ்டம் சேஞ்ச்கோரி போராடியவர்கள் இன்று தண்டிக்கப்படுகின்றனர்

Published

on

சிஸ்டம் சேஞ்ச் (முறைமை மாற்றம்) கோரி போராடியவர்கள் இன்று தண்டிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராகவே பயங்கரவாத  தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.  நாட்டுக்காக போராடிய அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக நுவரெலியா, ரிகில்கஸ்கட பகுதியில் இன்று (26.09.2022) நடைபெற்ற கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சாணக்கியன் இவ்வாறு கூறினார்.