Connect with us

Helth

இங்கிலாந்து பிரதமருக்கு மீண்டும் கொரோனாவா?

Published

on

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சக எம்.பி.யுடன் கொண்ட தொடர்பு காரணமாக தன்னை சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

போரிஸ் ஜோன்சன் இந்த ஆண்டில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றார்.

இதில் குணமடைந்த அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி ஆறுதல் அளித்தார்.

அவர் டவுனிங் ஸ்ட்ரீட்டில் இருந்து தனது பணியை தொடர்ந்து வருகிறார்.

இதற்கிடையே, கடந்த வாரம் எம்.பி.க்கள் குழுவுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இதில், அவருடன் தொடர்பில் இருந்த எம்.பி. லீ எண்டர்சன் என்பவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு முதல் போரிஸ் ஜோன்சன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்ட நபருடனான தொடர்பை தொடர்ந்து ஜோன்சன் சுய தனிமைப்படுத்துதலில் உள்ளார்.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பின் அதில் இருந்து விடுபட்ட நிலையிலும், தனிமைப்படுத்துதல் விதிகளில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை.