உள்நாட்டு செய்தி
கொரோனாவை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட வேண்டாம் – இராதா

கொரோனாவை பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் பெற முயற்சித்து வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்துள்ளார்.
‘சுகாதார பிரிவினரின் ஒத்துழைப்பு இன்றி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாது. நாட்டில் யுத்தம் நிலவிய போது யுத்தம் செய்யும் பொறுப்பு சுகாதார துறைக்கு வழங்கப்படவில்லை. எனவே தற்போது சுகாதார சம்பந்தமான பிரச்சினையை கையாள இராணுவத்திற்கு கையளிப்பது எவ்வாறு?. தற்போது புத்தாண்டு காலத்தில் நாட்டை மூடுமாறு சுகாதாரர துறை அரசாங்கத்தை கேட்டது. அப்படி செய்திருந்தால் இன்று அவதிப்பட தேவையிருந்திருக்காது. எனவே இப்போதாவது கொரோனா ஒழிப்பு பொறுப்பை சுகாதார பிரிவினருக்கு அரசாங்கம் வழங்க வேண்டும். ஆகவே கொரோனாவை பயன்படுத்தி அரசியல் செய்யாமல் எதிர்க் கட்சிக்கும் பொறுப்புகளை கையளித்து ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்’ என்றார்.