உள்நாட்டு செய்தி
சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 46,730 பேர் பாதிப்பு – DMC

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 11,796 குடும்பங்களை சேர்ந்த 46,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மழையுடனான வானிலையால் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
மூன்று வீடுகள் முழுமையாகவும் 636 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.