Connect with us

உள்நாட்டு செய்தி

அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு வழங்காது

Published

on

அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போதைய சூழ்நிலையில் ஆதரவு வழங்காது என கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அட்டனில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இராதாகிருஷ்ணன் இதனை கூறினார்.

தீபாவளி நிகழ்வுக்கு சென்றதால் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு ஆதரவு என்ற முடிவுக்கு வரக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.