Connect with us

உள்நாட்டு செய்தி

தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சிவப்பு புயல் எச்சரிக்கை

Published

on

தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சிவப்பு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்

‘அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவாகிறது. இதனால் மே 17 வரை தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.