Connect with us

உள்நாட்டு செய்தி

தமிழக அரசாங்கத்தால் வழக்கப்படவுள்ள மனிதாபிமான உதவிப் பொருட்கள்

Published

on

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள உதவிப்பொருட்களில் 9,000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான மருந்து பொருட்கள் உள்ளடங்கியுள்ளன.

இலங்கையை வந்தடைந்துள்ள இந்த உதவிப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைமைத்துவத்திடம் கையளிக்கவுள்ளார்.

தமிழக அரசாங்கத்தால் வழக்கப்படவுள்ள உதவிப்பொருட்களின் முதற்கட்ட உதவிப்பொருட்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து அனுப்பி வைத்திருந்தார்.

இவ்வாறு கிடைத்துள்ள உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள பயனாளர்களுக்கு அரசாங்கத்தால் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.