Connect with us

உள்நாட்டு செய்தி

கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பில் அதிக தொற்றாளர்கள்

Published

on

இன்று (14) காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,269 நபர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் அதிகமான தொற்றாளர்கள் கொழும்பில் பதிவாகியுள்ளனர்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 643 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்றைய தினம் 174 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காலியில் 135 தொற்றாளர்களும், குருகாணலையில் 100 தொற்றாளர்களும் மற்றும் களுத்துறையில் 121 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அதேபோல், கம்பஹா மாவட்டத்தில் 301 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், கேகாலையில் 91 பேரும், நுவரெலியாவில் 67 பேரும் மற்றும் கண்டியில் 61 பேருமாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொவிட் 19 நோய்த் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினத்தில் மாத்திரம் 73,955 பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.