உள்நாட்டு செய்தி
பாடசாலைகளை மீள திறப்பது குறித்து எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல்

பாடசாலைகளை மீள திறப்பது எதிர்வரும் புதன்கிழமை (12) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் நாட்டின் சுகாதார நிபுணர்கள் மற்றும் கல்வியலாளர்கள் கலந்துக்கொள்ள உள்ளதாக அவர் கூறினார்.
கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.