Connect with us

உள்நாட்டு செய்தி

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

Published

on

2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சை மே மாதம் 23ம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் திட்டமிட்டுள்ளன.

இம்முறை இந்தப் பரீட்சைக்கு நான்கு இலட்சத்து 5 ஆயிரத்து 123 பாடசாலை விண்ணப்பதாரிகளும், 1 இலட்சத்து 10 ஆயிரத்து 367 தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் விண்ணப்பத்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.

எதிர்வரும் காலத்தில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

3 தவணைகளையும் உள்ளடக்கிய வகையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த வருடம் ஒக்டோபர் 16ம் திகதி 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

ஒக்டோபர் 17ம் திகதியில் இருந்து நவம்பர் 12ம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையையும் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கூறினார்.