உள்நாட்டு செய்தி
A.அரவிந்தகுமார் கல்வி இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றார்

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கல்வி இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்து சமய கலாசார முறைப்படி நிகழ்வுகள் இடம் பெற்றன.
இராஜாங்க அமைச்சர், தமது பாரியார், தமது மகன் சகிதம் இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்தார்.
இந் நிகழ்விற்கு பிரதமர் சார்பில் அவரது மகன், கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயன்த் மற்றும் இராஜாங்க அமைச்சர்களான வியாழேந்திரன், உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், ஜானக வக்கும்புர, தேனுக விதானகமகே, கல்வி அமைச்சு செயலாளர் நிகால் ரணசிங்க ஆகியோரும், பதுளை மாவட்ட ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.