Connect with us

உள்நாட்டு செய்தி

மத்திய முகாம் – 04 கிராம சேவையாளர் பிரிவில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுப்பு

Published

on

அம்பாறை, நாவிதன்வெளி மத்திய முகாம் – 04 கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த பொன்னைய்யா ரசிகரன் (வயது 29) எனும் குடும்பஸ்தர், நேற்று (28) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார், குடும்ப உறவினர்களிடம் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு மேற்படி குடும்பஸ்தரை அழைத்து வந்த நபரொருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்மரணம், தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.