Connect with us

உள்நாட்டு செய்தி

நாவலப்பிட்டி மற்றும் ஹபரணை பிரதேசத்தில் இருவர் கொலை

Published

on

நாவலப்பிட்டி மற்றும் ஹபரணை பிரதேசத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி, இங்குருஓயா வடக்கு பிரதேசத்தில் படுகாயங்களுடன் இருந்த தம்பதிகள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பழைய முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், கொலையை செய்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஹபரணை சேனாதிரியாகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்தவரின் மனைவியின் தந்தையே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கெட்டஹெத்த ஹிங்குரஹேன பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் என்பதுடன் கொலையை செய்த சந்தேக நபரும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.