உள்நாட்டு செய்தி
தனிமைப்படுத்தல் கட்டணம் செலுத்த முடியாத வெளிநாட்டு பணியாளர்களுக்கு இலவச சேவை
கட்டணம் செலுத்துவதற்கான இயலுமையின்றி நாடு திரும்ப எதிர்பார்த்திருக்கும் அனைத்து பணியாளர்களையும் இலவசமாக தனிமைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கை பணியாளர்களுக்காக இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.
இதற்காக 15 ஹோட்டல்களில் 800 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வௌிநாடுகளில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.