Connect with us

உள்நாட்டு செய்தி

அரச ஊழியர்கள் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள ஆர்வம் – தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

Published

on

அரச ஊழியர்கள் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், அரசாங்க ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்ல விரும்பும் அரச ஊழியர்களை பதிவு செய்யுமாறு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தின் ஊடாக அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 15,000 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் இதற்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அதில் 273 பேர் இவ்வாறு பதிவு செய்து வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளனர்.

மேலும் அரசாங்க ஊழியர்கள் வெளிநாடு செல்ல விரும்புகின்றனர். ஆனால் அந்தந்த நாடுகளின் தொழில் சந்தைக்கு ஏற்றவாறு அரசாங்க ஊழியர்களுக்கு தேவையான தகுதிகளை பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.