உள்நாட்டு செய்தி
“மைத்திரிபால சிறிசேன என்னை தூற்றினாலும் நான் அவ்வாறு நடந்துக்கொள்ள மாட்டேன்” – ரணில்
மீண்டும் பாராளுமன்றம் உறுப்பினராவது குறித்து அக்கறை செலுத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
டுரூட்வித் சமுதித்த என்ற யூடியூப் தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
ரணில்: (மீண்டும் பாராளுமன்றம் உறுப்பினராவது குறித்து அக்கறை செலுத்தவில்லை. கட்சி கேட்டுள்ளது, இப்போதைக்கு முடிவில்லை. தற்போது மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் உடைந்துள்ளன. நல்லாட்சியல் பல முரண்பாடுகள் இருந்த போதிலும் மக்களுக்கு சேவை செய்தோம். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை தூற்றினாலும் நான் அவ்வாறு நடந்துக்கொள்ள மாட்டேன். அது சிறந்ததல்ல. மைத்திரிபால சிறிசேனவை பதவியில் இருந்து நீக்க இந்தியா உதவியதாக தெரிவிக்ககப்படுவதில் உண்மையில்லை. தற்போதைய பிரதமருடன் எனக்கு எந்தவித டீல் அரசியலும் இல்லை. ஆனால் அரசியலில் போட்டிதன்மை உண்டு. நான் அண்மையில் பெந்தோட்டையில் தற்போதைய பிரதமரை சந்தித்தது உண்மை. எனினும் இதன்போது தாக்குதல் அறிக்கை குறித்து பேசவில்லை. பொதுபல சேனா அமைப்புக்குள் ஆரம்பத்தில் பிரிவினைவாதம் இருந்தது. சமய பிரிவினைவாதம் என்ற சட்டத்தை கொண்டு வருவதன் ஊடாகவே சகல அமைப்புகளையும் தடைச்செய்ய ஆற்றல் உண்டு. நாட்டில் இளைஞர்களுக்கு பொருத்தமான அரசியல் முன்னணி அவசியம்.”)