முக்கிய செய்தி
எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் !
வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அடிப்படையில் வழங்கும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அதிக விலைக் கொடுத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அடிப்படையில், பெற்றுக்கொண்டுள்ளமை யுக்திய போதைப்பொருள் விசேட சோதனை நடவடிக்கையின் போது தெரியவந்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அடிப்படையில் வழங்கும் போது, அவதானத்துடன் செயற்படுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.