முக்கிய செய்தி
சிரேஷ்ட பிரஜை குறித்து சஜித் ஆதங்கம்

சிரேஷ்ட பிரஜைகள் நல் வாழ்வை பேணுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அனைவரினதும் தார்மீகப் பொறுப்பாகும். கடந்த காலங்களில் சிரேஷ்ட பிரஜைகளினது ஒரே வருமானமாக காணப்பட்ட அவர்களது கணக்குகள் மீதான 15% வட்டியை குறைத்துள்ளமை காரணமாக, அவர்கள் மேலும் ஆதரவற்ற நிலைக்கு மாற வேண்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் கீழும் இந்த தவறு சரி செய்யப்படாததால், மீண்டும் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் இது தொடர்பாக அரசாங்கத்திடம் நான் கேள்வி எழுப்பினேன். இந்த வட்டி வருமானம் குறைவதால், பலருக்கு மருத்துவ வசதி மற்றும் போஷாக்கான உணவுகளைப் பெற முடியாமல் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். எனவே, இத்தரப்பினரின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.