முக்கிய செய்தி
மக்கள் உதவியை நாடும் பொலிஸார்..!

நீதிமன்ற வளாகத்தில் கனேமுல்ல சஞ்சீவ என்ற குற்றவாளியை சுட்டுக் கொல்ல உதவிய சந்தேகப் நபரான பெண் இஷாரா செவ்வந்தியை இரண்டு வாரங்களாக பொலிஸாரால் பிடிக்க முடியாமல் உள்ளது.இன்னும், காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினரும் முயற்சித்தும் சந்தேகநபரை கைது செய்ய முடியாமல் போனதுடன், அவரைக் கைது செய்ய பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் அண்மையில் கோரியிருந்தனர்.
இதன்படி, சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு விரைவில் தொடர்பு கொள்ளவும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து 12 இலட்சம் ரூபா பரிசாக வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரிய தீர்மானித்துள்ளார்.10 இலட்சம் ரூபாவை முன்னதாக வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.ஆனால் 14 நாட்களாகியும் சந்தேகநபரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் பொலிசார் மீண்டும் பரிசுத் தொகையை அதிகரித்திருப்பதை காணமுடிகிறது.எனவே, குறித்த சந்தேகநபர் தொடர்பில் எந்தவொரு சரியான தகவலையும் வழங்குபவர்களின் இரகசியத்தன்மையை பாதுகாப்பதில் இலங்கை காவல்துறை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 071-8591727 (இயக்குனர், கொழும்பு குற்றப் பிரிவு) அல்லது 071-8591735 (நிலையத் தளபதி, கொழும்பு குற்றப் பிரிவு)