முக்கிய செய்தி
தங்காலை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில் பெண்ணின் சடலம் மீட்பு..!
ஹம்பாந்தோட்டை – தங்காலை மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மித்த கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் ரன்ன தலுன்ன பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தங்காலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.