முக்கிய செய்தி
இலங்கை தம்பதிகள் வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றால்அது இலங்கை சட்டப்படி செல்லுபடியாகும் என நீதிமன்றம் தீர்ப்பு_..!
வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரும் இலங்கையில் திருமணமான தம்பதிகளுக்கு அந்த விவாகரத்து இலங்கை சட்டப்படி செல்லுபடியாகும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த வகையில், வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்து பெறும் தம்பதிகள், இலங்கையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்குத் திரும்பி வந்து விவாகரத்துக்கான நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் உள்ள நீதிமன்றத்தினால் பெறப்பட்ட தனது விவாகரத்தை ஏற்றுக்கொள்ளுமாறு திருமணப் பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.