முக்கிய செய்தி
தேசிய வைத்தியசாலையில் இரண்டு எக்ஸ்ரே இயந்திரங்களும் பழுதடைந்துள்ளன
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள எக்ஸ்ரே இயந்திரங்கள் இரண்டும் இயங்கவில்லை என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை கதிரியக்கப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டியது அவசியமானதால் அவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரதான எக்ஸ்ரே இயந்திரம் பழுதடைந்துள்ளதாகவும் அதன் பின்னர் இரண்டாவது இயந்திரத்தை பயன்படுத்தி எக்ஸ்ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.