முக்கிய செய்தி
விளையாட்டு சட்டத்தை அமைச்சரவை மீறியுள்ளது: சஜித்
கிரிக்கெட்டை நிர்வகிப்பதற்கு இடைக்கால குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கோரியுள்ள அமைச்சரவை தீர்மானம் விளையாட்டு சட்டங்களை மீறும் செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
“கிரிக்கெட்டை நிர்வகிப்பதற்கு இடைக்கால குழுக்கள் அல்லது திறமையான அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் விளையாட்டு அமைச்சருக்கே உள்ளது. விளையாட்டு அமைச்சின் விவகாரங்களில் அமைச்சரவை எவ்வாறு தலையிட முடியும்?” என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.