முக்கிய செய்தி
சீனி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு அடுத்த ஆண்டு சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்கான செயல்திட்டத்தை மூன்று மாதங்களுக்குள் தயாரித்து ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையில் சீனியின் தேவை சுமார் 600,000 மெட்ரிக் தொன்களாகும்.
இலங்கையில் உள்ளுர் விநியோகத்திற்காக 10 வீதம் அல்லது அறுபதாயிரம் மெட்ரிக் தொன் சீனி மாத்திரமே உற்பத்தி செய்யப்படுவதாக பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.