முக்கிய செய்தி
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியன அடுத்த வருடம் தவறாது நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார். அத்துடன்,பாதீட்டு திட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.