முக்கிய செய்தி
நமக்காகப் போராடியவர்களை நாம் கௌரவிக்கும் வாரம் இது: நாடாளுமன்றில் சுமந்திரன் உரை
எங்களுக்கு இது ஒரு முக்கியமான வாரம். எங்களுக்காகப் போராடி மடிந்தவர்களை நாங்கள் கௌரவித்து வணங்கும் வாரம் இதுவென நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் அவர் இன்று(22) கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய நீரோட்டம்
“இது ஒரு முக்கியமான வாரம். எங்களுக்காகப் போராடியவர்களுக்காக நாம் அவர்களை கௌரவிக்கும் வாரம் இது. அந்தவகையில் அதை வெளிப்படுத்துவதற்கு நான் தயங்க மாட்டேன். ஏன் அவர்கள் எங்களுக்காகப் போராடினார்கள்? ஏனென்றால் தேசிய நீரோட்டத்தில் இருந்து, வாழ்க்கையில் இருந்து, (உங்களால்) நாம் தூக்கி வீசப்பட்டோம்.
நமக்காகப் போராடியவர்களை நாம் கௌரவிக்கும் வாரம் இது: நாடாளுமன்றில் சுமந்திரன் உரை
எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. நாம் அந்தச் சிந்தனையில் இப்போது இல்லை. ஐக்கியப்பட்ட, பிளவுபடாத, பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட நாட்டுக்குள் சேர்ந்து வாழ்வதற்கு நாங்கள் இன்னும் தயாராகவே இருக்கின்றோம் என்பதை நாம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கின்றோம்.
அதற்கு உங்கள் பிரதிபலிப்பு எப்படி இருந்தது? எப்படி இருக்கின்றது? முடிவு உங்களின் கைகளில். நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எங்களை எப்போதும் இப்படி தனித்து நீங்கள் ஒதுக்கி விட முடியாது.
தவறான சிந்தனை
எங்களுக்காகப் போராடியவர்களின் மறைவை அவர்களின் உறவுகள் வடக்கு, கிழக்கில் நினைவு கூரும் இச்சமயத்தில், எங்களை நீங்கள் ஒதுக்கித் தள்ளி விட முடியாது என்பதை மீண்டும் குறிப்பிடுகின்றேன்.
அதிக எண்ணிக்கை உங்கள் பக்கம் இருப்பதால் மட்டும் உங்கள் கருத்து சரி என்று ஆகிவிடாது. அத்தகைய அதிக எண்ணிக்கை பல சமயங்களில் உங்களைத் தவறானவர்களாக செயற்பட வைத்து விடும். நீங்கள் உங்கள் எண்ணிக்கையை வைத்து எங்களை முற்றாக அழித்து விடலாம் என்று நினைக்கின்றீர்கள். அதைத்தான் இந்தச் சபையிலும் கூட நீங்கள் செய்கின்றீர்கள்” என தெரிவித்துள்ளார்.