முக்கிய செய்தி
அரச நிறுவன அதிகாரிகளிடம் தமது நிலைப்பாட்டை வெளிக்காட்டிய ஜனாதிபதி
நாட்டிற்கு தேவையான வருவாயை சேகரிக்கத் தவறியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம், கலால் மற்றும் சுங்க திணைக்களங்களின் பிரதானிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது கடும் நிலைப்பாட்டை வெளிக்காட்டியுள்ளார்.அத்துடன் வரிக் கோப்புகளின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும், என்றபோதும் 500,000 வரிக் கோப்புகளின் அடிப்படையில் மாத்திரம் ஏன் வரி அறிவிடல் தொடர்கின்றது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரச நிறுவனங்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதற்கான தனது முயற்சியில், நாட்டின் வரித் தளத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் இன்னும் ஏன் செய்யப்படவில்லை என்று அவர் வினவியுள்ளார்.திறக்கப்பட்டுள்ள கோப்புகள்மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி உள்நாட்டு வருவாய் திணைக்களத்தில் 500,000 வரிக் கோப்புகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன, எனினும் கோப்புகள் மில்லியன் கணக்கில் இருக்க வேண்டும்.
இந்த அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் தோல்வியினால் தான் அரசாங்கம் தனது வருமான இலக்குகளை அடையத் தவறி வருகிறது என்று ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.