முக்கிய செய்தி
தற்போது 150 புகையிரத சாரதிகள் பற்றாக்குறை..!
புகையிரத திணைக்களத்தில் தற்போது 150 புகையிரத சாரதிகள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் ரயில் போக்குவரத்தில் கடும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதனால் சில சாரதிகள் விடுமுறை எடுக்காமல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்திருந்தது.சில சமயங்களில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, இயக்க பணிக்கு உத்தரவிடப்பட்டாலும், ரயில் சாரதிகள் பற்றாக்குறை திணைக்களத்திற்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது என்றார்.எவ்வாறாயினும், புதிய ரயில் சாரதிகளை இணைத்துக் கொண்டாலும், அவர்களை சரியான சாரதியாக மாற்றுவதற்கு சுமார் 4 வருடங்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.